1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (10:35 IST)

நடிகர் கவின் திருமணம்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் கவினுக்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி திருமணம் நடைபெறும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் அவரது திருமணம் முடிந்துள்ளது.   மணமகளுடன் கவின் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவர் கவின். சமீபத்தில் இவரது நடிப்பில் உருவான டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது 
 
இந்த நிலையில் தற்போது அவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணை ஆகஸ்ட் 20ஆம் தேதி கவின் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. மணமகள் பெயர் மோனிகா என்றும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் இன்று காலை கவின் திருமணம் நடைபெற்றது எடுத்து பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். விஜய் டிவி புகழ் கவினுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
 
Edited by Siva