திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (07:50 IST)

துருவ் விக்ரம் படத்துக்கு நான் இசையமைக்கவில்லை… டிவிட்டரில் அறிவித்த ஏ ஆர் ரஹ்மான்!

கவின் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து கவனம் பெற்ற நடிகைகளில் ஒருவரன அபர்ணாதாஸ் நடித்திருந்தார். படம் வெற்றி பெற்றதை அடுத்து அவரின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் அவர் இயக்கத்தில் அடுத்து உருவாகும் படத்தில் துருவ் விக்ரம் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தன.

ஆனால் இப்போது அந்த தகவலை டிவிட்டரில் மறுத்துள்ளார் ஏ ஆர் ரஹ்மான். அவரின் ட்வீட்டில் “அது உண்மையில்லை. தயவு செய்து வதந்திகளை பரப்பாதீர்கள். திறமைமிகுந்த துருவ் விக்ரம் மற்றும் அந்த கூட்டணி வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.