1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (17:59 IST)

தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே வேட்பாளர் பட்டியல்: பாஜகவின் அதிரடி..!

இந்த ஆண்டு மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளர் பட்டியலை அறிவித்து பாஜக அதிரடி செய்துள்ளது.  
 
அடுத்த ஆண்டு இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன்னர் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 
 
இந்த நிலையில்  இந்த இரு மாநிலங்களையும் ஆட்சிய பிடிக்க பாஜக தீவிர முயற்சி செய்து வரும் நிலையில் தேர்தல் தேதி இன்னும் ஒரு சில வாரங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில்  இரு மாநிலங்களிலும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக சற்று முன் வெளியிட்டு அதிரடி காட்டி உள்ளது
 
Edited by Siva