வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 3 ஆகஸ்ட் 2022 (09:10 IST)

விராட் கோஹ்லிக்கு சூர்யகுமார் யாதவ்வால் சிக்கலா? முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் கருத்து!

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி 20 தொடருக்காக வெஸ்ட் இண்டீஸில் முகாமிட்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த இரு போட்டிகளிலும் புதுமுயற்சியாக சூர்யகுமார் யாதவ் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். ஆனால் அவர் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் கேப்டன் ரோஹித் ஷர்மாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஆனால் நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் அரைசதம் அடித்து விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் பார்த்திவ் படேல் சூர்யகுமார் யாதவ்வை ஓபனிங் பேட்ஸ்மேனாக இறக்குவது கோஹ்லியின் மூன்றாம் நம்பர் இடத்தைக் காப்பாற்றதான் எனக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக “சூர்யகுமார் யாதவ் மூன்றாவது இடத்தில் இறங்கி விளையாடி ரன்களைக் குவித்துவிட்டால், அதனால் கோஹ்லி அணிக்குள் வரும்போது அவருக்கு பிரச்சனை ஏற்படும். அதனால் அவருடைய இடத்தைக் காப்பாற்ற சூர்யகுமார் யாதவ்வை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க செய்கின்றனர்” எனக் கூறியுள்ளார்.