1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (18:01 IST)

''விருமன் ''படத்தில் எனக்குப் பிடித்தமான பாடல் இதுதான் - சூர்யா

விருமன் படத்தில் எனக்குப் பிடித்த பாடல் இதுதான் என நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில்முன்னணி நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விருமன். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஷங்கர் மகள் அதிதி நடித்துள்ளார். இவர்களுக்டன் கருணாஸ், சூரி, ராஎஜ்கிரண், பிரகாஷ்ராஜ் நடித்துள்ளனர்.

நடிகர் சூர்யா – ஜோதிகா தயரித்துள்ள இப்படத்திற்கு,யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  நாளை( ஆகஸ்ட்-3) ரிலீஸாகிறது.

இந்த  நிலையில், ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்ற கஞ்சப் பூவு பாடல் ஹிட்டான  நிலையில், இன்று மதுர வீரன் என்ற பாடலின் கிளிம்ஸ் வீடியோவை யுவன் வெளியிட்டுள்ளார். இப்பாடல் தனக்குப் பிடித்தமானது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.