ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 4 ஏப்ரல் 2022 (16:04 IST)

சின்ன வயசுல இருந்து தொடர்ந்த ஆசை… பொன்னியின் செல்வன்ல நனவாயிடுச்சு… கார்த்தியின் வைரல் புகைப்படம்!

நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குதிரை ஏற்றம் செய்து பல காட்சிகளில் நடித்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளார்.

கார்த்தி நடித்த சுல்தான் சமீபத்தில் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படங்கள் எல்லாம் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் விதமாக உள்ளன. பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார், முத்தையா இயக்கத்தில் விருமன் மற்றும் இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் என நடித்து வருகிறார். இதில் பொன்னியின் செல்வன் இந்தியா முழுவதும் பேன் இந்தியா படமாக ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் தற்போது கார்த்தி ஒரு குதிரையுடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த புகைப்படத்தில் குதிரையோடு நிற்கும் கார்த்தி, பதிவில் ‘ சின்ன வயதில் இருந்தே எனக்கு குதிரைகள் மீது கவர்ச்சி உண்டு. காஷ்மோரா படத்துக்காக குதிரை சவாரி கற்றுக்கொண்டேன். ஆனால் பொன்னியில் செல்வனில்தான் அதை முழுமையாக பயன்படுத்தினேன். பொன்னியின் செல்வன் ஷூட் முழுவதும் நான் குதிரை சவாரி செய்துகொண்டுதான் இருந்தேன்’ எனக் கூறிய்ள்ளார்.