செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (15:29 IST)

கார்த்திக் சுப்பராஜின் சூப்பர் ஹிட் படத்தின் பார்ட் 2! வெளியான செம்ம அப்டேட்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

கார்த்திக் சுப்புரா இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனம் ஆகியோர் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. இந்த படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்திய பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இந்த படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஜிகர்தண்டாவின் இந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார் நடித்தார்.  ஆனால் தமிழில் பெற்ற வெற்றியை இந்தியில் அந்த திரைப்படம் பெறவில்லை. இந்நிலையில் இப்போது ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. முதல் பாகத்தை தயாரித்த கதிரேசனே இந்த பாகத்தையும் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் லாரன்ஸ் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.