வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 மார்ச் 2023 (14:59 IST)

முதல் விதை நான் போட்டது.. இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 திட்டம் குறித்து கமல்ஹாசன்..!

இல்லத்தரசிகளுக்கு  பணம் கொடுப்போம் என்று அறிவிப்பை முதன் முதலில் வெளியிட்டது மக்கள் நீதி மய்யம் என்ற நிலையில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இந்த திட்டம் குறித்து தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இல்லத்தரசிகளுக்கு மாதாமாதம் பணம் தரும் திட்டம், தன்னுடைய கட்சியின் திட்டம் என கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று இல்லத்தரசிகளுக்கு ரூபாய் 1000 திட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி 
மக்கள் நீதி மய்யம். புரட்சிகரமான இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளின் உரிமைத்தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன்.
 
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறேன். இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது. 
 
Edited by Mahendran