1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. from today rain in one week at tamil nadu

இன்று முதல் ஒரு வாரம் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

சென்னை
இன்று முதல் ஒரு வாரத்திற்கு மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழக மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளது. 
 
ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சென்னையில் நேற்று இரவு லேசான மழை பெய்த நிலையில் இன்றும் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
நடிகர் சங்க கட்டிடத்திற்கு தடை உள்ளதா? நடிகர் நாசர் விளக்கம்