புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 மே 2021 (12:38 IST)

கல்லூரி நண்பருடன் ரஜினிகாந்த்… வைரலாகும் புகைப்படம்!

நடிகர் ரஜினிகாந்த் தனது கல்லூரி நண்பரான மோகன் பாபுவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தான் பார்த்து வந்த நடத்துனர் வேலையை விட்டுவிட்டு நடிப்புக்கு வர ஆசைப்பட்ட போது அவர் சென்னையில் உள்ள அடையார் திரைப்படக் கல்லூரியில் மாணவராக சேர்ந்தார். அப்போது அவரின் சக மாணவராக நட்பானவர் தெலுங்கு நடிகர் மோகன் பாபு. இருவரும் இப்போது வரை வாடா போடா என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு நண்பர்கள். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் அண்ணாத்த பட ஷூட்டிங்கின் போது மோகன் பாபுவை சந்தித்த ரஜினிகாந்த் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.