1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Vijay sethupathi and manikandan in Pandiraj Direction

மீண்டும் இணையும் ‘தலைவன் தலைவி’ கூட்டணி… முக்கிய வேடத்தில் மணிகண்டன்!

விஜய் சேதுபதி
மகாராஜா படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதிக்கு ஒரு வணிக வெற்றிப்படமாக அமைந்துள்ளது ‘தலைவன் தலைவி’. கடந்த வாரம் ரிலீஸான இந்த படம் 50 கோடி ரூபாய் வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க குணச்சித்திர வேடங்களில் யோகி பாபு, சரவணன், தீபா என  ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸுக்காக பாண்டிராஜ் இயக்கி இருந்தார்.

தலைவன் தலைவி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் நடிகர் மணிகண்டன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

கிழக்குச் சீமையிலே போல மாமன் மச்சான் உறவை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
பிற மொழிப் படங்களை இயக்கும் போது மாற்றுத்திறனாளி போல உணர்கிறேன்… AR முருகதாஸ் பதில்!