வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2021 (20:52 IST)

கர்ணன் படத் தயாரிப்பாளருக்கு நடிகர் தனுஷ் நன்றி

கர்ணன் படத் தயாரிப்பாளருக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரித்து டுவீட் பதிவிட்டுள்ளார்.

 
தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கிய கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் காட்சிகள் லாக்டவுனால் பாதிக்கப்பட்டதால் தளர்வுகளுக்குப் பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு சமீபத்தில் முடிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் அப்டேட்டிற்கான ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

எனவே கர்ணன் பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளபடி நேற்று காலை 11 மணிக்குத் தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷின் கர்ணன் படம் வரும் ஏப்ரல்-2021 ல் வெளியாகும் என ஒரு சிறிய டீசரில் தெரிவிக்கப்பட்டது.

 
இதனால் குஷியான தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஹேஸ்டேக் ட்ரெண்டிங் செய்தனர்.

இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது படம் தியேட்டரில் வெளியாவது குறித்து நன்றி தெரிவித்து ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், வரும் 2021 ஏப்ரலில் கர்ணன் படம் தியேட்டரில் ரிலீஸாவது குறித்து மகிழ்ச்சி. தயாரிப்பாளர் தாணு சார் தேவையானபோது, இந்த முடிவை எடுத்துள்ளது, தியேட்டர் அதிபர்களுக்கும், பணியாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும். இதற்கு என் சார்பிலும் என் ரசிகர்கள் சார்பிலும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.