புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 31 ஜனவரி 2021 (13:57 IST)

’கர்ணன்’ ரிலீஸ் குறித்து தனுஷ் வெளியிட்ட அறிக்கை!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய ’கர்ணன்’ என்ற திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு தனது டுவிட்டரில் வீடியோ ஒன்றினை வெளியிட்டு உறுதி செய்தார் என்பதை பார்த்தோம்
 
இருப்பினும் சரியான ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதும் ஏப்ரல் 14ம் தேதி இந்த படம் ரிலீசாக அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’கர்ணன்’ ரிலீஸ் குறித்த தயாரிப்பாளர் அறிவிப்புக்கு தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
 
மிகச் சரியான நேரத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யும் முடிவை எடுத்த கலைபுலி எஸ் தாணு அவர்களுக்கு எனது நன்றி என்றும் அதேபோல் திரையரங்கு உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் அனைத்து துறையினருக்கும் நன்றி என்றும், இந்த நேரத்தில்  திரையரங்கு மற்றும் திரையுலகைச் சேர்ந்த சார்ந்து இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் தனது மிகப்பெரிய நன்றி என்றும் இந்த படம் திரையரங்குகளில் வெளியாவதால் அனைவருக்கும் நன்மை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
 
மேலும் தனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் இந்த படம் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் தனுஷின் இந்த அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது