திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (09:18 IST)

தமிழகத்தில் இனி வாரம் ஒருமுறை வேக்சின் மெகா கேம்ப் !

இனி வாரத்திற்கு ஒருமுறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மெகா கேம்ப் நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. 

 
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் முகாம்கள் அமைத்து 20 லட்சம் தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்றது. 
 
இந்நிலையில் இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 28,91,021 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது மிகப்பெரிய சாதனை. தமிழகத்தில் இதுவரை 4,03,13,112 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 6 கோடியே 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும். 
 
எனவே 66 சதவீதத்துக்கும் மேலாக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தமிழக மக்களிடையே பெரிய அளவிலான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதேபோல் வாரத்திற்கு ஒருமுறை மெகா கேம்ப் நடத்த இருக்கிறோம். எனவே மத்திய அரசு, தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.