திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 14 ஜனவரி 2021 (14:58 IST)

சிம்பு படங்களுக்கு இனி ஒத்துழைப்பு இல்லை – தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!

நடிகர் சிம்புவின் படங்களுக்கு இனி ஒத்துழைப்பு அளிப்பதில்லை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் பொங்கலை முன்னிட்டு ஈஸ்வரன் நாளை வெளியாக உள்ளது. ஆனால்  ஈஸ்வரன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தயாரிப்பாளர் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு சிம்பு பதில் சொல்லவேண்டும் என்று ஒரு புகார் கொடுத்துள்ளாராம். அதுமட்டுமில்லாமல் கொரில்லா படத்தின் தயாரிப்பாளரிடம் அடவான்ஸ் வாங்கிவிட்டு சிம்பு படம் நடிக்காமல் போக்குக் காட்டியதால் அவரும் புகார் கொடுத்துள்ளாராம். இந்த பிரச்சனைகள் எல்லாம் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் வந்து நிற்கிறதாம். இந்த இரண்டு பிரச்சனைகளையும் முடித்தால்தான் ஈஸ்வரன் ரிலீஸாவது உறுதியாகும் என சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமான பேச்சுவார்த்தையின் முடிவில் ஈஸ்வரன் படத்தின் தயாரிப்பாளர் பாலாஜியின் கோரிக்கையை ஏற்று படம் இன்று ரிலீஸ் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இனிமேல் சிம்புவின் படங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.