திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 21 ஜனவரி 2021 (08:02 IST)

தொலைக்காட்சியில் இன்னும் விலைபோகாத சிம்புவின் ஈஸ்வரன்! ஏன் தெரியுனா?

சிம்பு மற்றும் நித்தி அகர்வால் நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் தொலைக்காட்சி உரிமை இன்னும் விலைபோகாமல் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் பொங்கலை முன்னிட்டு ஈஸ்வரன் நாளை வெளியாக உள்ளது. ஆனால்  ஈஸ்வரன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் எல்லா பிரச்சனைகளையும் மீறி படம் கடந்தவாரம் வெளியானது. கலவையான விமர்சனங்களை படம் பெற்றுள்ளது. மாஸ்டர் படத்துக்கு முன்னால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் ஈஸ்வரன் தற்போது ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் தொலைக்காட்சி உரிமை இன்னும் விற்பனையாகாமல் உள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னணி நடிகர்களின் படங்கள் எல்லாம் ரிலீஸுக்கு முன்னரே விற்பனை செய்யப்பட்டு விடும் என்ற நிலையில் அதற்கான காரணம் என்ன என்பது இப்போது வெளியாகியுள்ளது. ஈஸ்வரன் படத்தின் தொலைக்காட்சி உரிமைக்கு தயாரிப்பாளர் சொல்லும் அதிகபட்ச விலையேக் காரணம் என சொல்லப்படுகிறது. சிம்பு படத்துக்கு தொலைக்காட்சிகளில் மிகப்பெரிய அளவில் டி ஆர் பி இல்லை என்பதால் அவ்வளவு தொகை கொடுத்து வாங்க எந்த நிறுவனமும் முன் வரவில்லை என சொல்லப்படுகிறது.