1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 15 ஜனவரி 2021 (16:08 IST)

ஈஸ்வரன் திரைப்படமும் ஆன்லைனில் வெளியானது! படக்குழு அதிர்ச்சி!

ஈஸ்வரன் திரைப்படம் இணையத்தில் பல தளங்களில் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் பொங்கலை முன்னிட்டு ஈஸ்வரன் நாளை வெளியாக உள்ளது. ஆனால்  ஈஸ்வரன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் எல்லா பிரச்சனைகளையும் மீறி படம் நேற்று வெளியானது. கலவையான விமர்சனங்களை படம் பெற்றுள்ளது.

இந்நிலையில் படம் வெளியான இரண்டாம் நாளே இணையத்தில் பல தளங்களில் அதன் தியேட்டர் பிரிண்ட் வெளியாகியுள்ளது. டெலிகிராம் உள்ளிட்ட ஆப்களிலும் படம் பகிரப்பட்டு வருவதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.