திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 11 ஜூன் 2021 (16:04 IST)

புகார் கொடுக்க சொன்னதே ஆர் பி சௌத்ரிதானா? என்னய்யா சொல்றீங்க!

நடிகர் விஷால் பிரபல தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி மேல் காவல் நிலையத்தில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் குட் பிலிம்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் திரைப்படம் தயாரித்துள்ள ஆர். பி. சௌத்ரி தமிழ்த் திரைப்பட நடிகர்களான ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகியோர்களின் தந்தை. இந்நிலையில் இவர் மீது நடிகர் விஷால் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். தி.நகர் காவல் துணை ஆணையரிடம் தனது புகாரை கொடுத்துள்ள விஷால் அதில், நான் தயாரித்த படங்களுக்கு புரோ நோட் மூலம் லட்ச கணக்கில் கடன் வாங்கியதாகவும் இப்போது அந்த கடனை அடைத்து முடித்த பின்னரும் புரோ நோட்களை திரும்ப தரவில்லை என குறிப்பிட்டுள்ளார். 

இந்த புகார் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் புகாரைக் கொடுக்க சொன்னதே ஆர் பி சௌத்ரிதான் என சிலர் பேசிவருகின்றனர். என்னதான் ப்ரோநோட்கள் காணவில்லை என சொன்னாலும், பின்னாளில் பிரச்சனை வரலாம் என விஷால் தயங்கிய போது சௌத்ரிதான் ‘வேண்டுமானால் இது சம்மந்தமாக காவல் நிலையத்தில் புகார் கொடு. அது ஒரு ஆவணமாகி விடும். பின்னாளில் ஏதேனும் பிரச்சனை வந்தால் புகாரை வைத்து பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ளலாம்’ என கூறியதாக சொல்லப்படுகிறது. இல்லையென்றால் தன் நெருங்கிய நண்பரான ஜீவாவின் தந்தை மேல் விஷால் புகார் கொடுப்பாரா என்ற கேள்வியும் எழுகிறது.