வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 9 ஜூன் 2021 (16:45 IST)

கடன் சர்ச்சை - ஜீவாவின் தந்தை மீது விஷால் புகார்!

திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது நடிகர் விஷால் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
சூப்பர் குட் பிலிம்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் திரைப்படம் தயாரித்துள்ள ஆர். பி. சௌத்ரி தமிழ்த் திரைப்பட நடிகர்களான ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகியோர்களின் தந்தை. 
 
இந்நிலையில் இவர் மீது நடிகர் விஷால் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். தி.நகர் காவல் துணை ஆணையரிடம் தனது புகாரை கொடுத்துள்ள விஷால் அதில், நான் தயாரித்த படங்களுக்கு புரோ நோட் மூலம் லட்ச கணக்கில் கடன் வாங்கியதாகவும் இப்போது அந்த கடனை அடைத்து முடித்த பின்னரும் புரோ நோட்களை திரும்ப தரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.