திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 2 பிப்ரவரி 2019 (16:20 IST)

இந்தியன் 2: சிம்புவை கழட்டிவிட்ட படக்குழு அடுத்தது யாரை தேர்வு செய்திருக்கிறார்கள் தெரியுமா?

இந்தியன் 2 படத்தில் சிம்பு கோட்டைவிட்ட இடத்தை நடிகர் ஆர்யா தக்கவைத்துள்ளார்.



பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்று வரலாற்றில் பேசப்படும் படமாக  ‘இந்தியன்’ திரைப்படம்  ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டது. தற்போது 22 வருடங்கள் கழித்து  இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை  ஷங்கர் இயக்கி வருகிறார்.
 
கமலுக்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடித்துவருகிறார். அண்மையில், தான் இப்படத்தில் வித்யாசமாவும்,  இதுவரை என்னை யாரும் பார்த்திராதவகையில் என் நடிப்பு இந்தியன் 2ம் பாகம் படத்தில் தென்படும் என்று நம்பிக்கையோடு தெரிவித்திருந்தார்.
 
அதனை தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க இந்தி நடிகர்களான அக்‌‌ஷய் குமார், அஜய் தேவ்கன் போன்றோருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. இப்படத்தில் ஏற்கனவே நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரம் எடுத்துள்ளது. 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், இந்தியன் 2 பாகம் படத்தில்  நடிக்க நடிகர் ஆர்யாவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.


 
ஏற்கனவே நடிகர் சிம்பு இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்றும் பின் அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் செய்தி வெளியாகியது. இதற்கிடையில் தற்போது நடிகர் ஆர்யாவை நாடியுள்ள படக்குழு, அநேகமாக இது சிம்புவின் இடத்தை பூர்த்தி செய்வதற்காகத்தான் இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.