திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 31 ஜனவரி 2019 (19:58 IST)

இந்தியன் 2: எனக்கு பதில் ஏன் அனிருத்? ரகுமான் ஓபன் டாக்!

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் இந்திய 2 படத்தின் படபிடிப்பு துவங்கியது. ஆனால், சில காரணங்களாக தற்போது படபிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. 
 
இந்திய 2 படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். எப்போதும் ஷங்கர் படமென்றால் ரகுமான் நிச்சயம் இருப்பார். 
 
அதேபோல் இந்தியன் 2 படத்தில் அவர் இசையமைப்பாளராக ஒப்பந்தமாவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடவில்லை. இது குறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறியது பின்வருமாறு,
 
தற்போது இல்லை ஷங்கர் அந்நியன், நண்பன் படத்தில் கூட வேரு இசையமைப்பாளர்கலை வைத்து வேலை பார்த்துள்ளார். இது ஒரு சிறிய கேப்தான், நாங்கள் மீண்டும் இணைவோம்.
 
ஆனால், கமல் சார் நான்தான் இசையமைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். ஆனால், ஒரு சில காரணங்களால் முடியவில்லை என்று கூறினார்.