செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 2 பிப்ரவரி 2019 (12:52 IST)

ஆர்யா - சாயிஷா திருமணம் என்பது வதந்தி - அபர்ணதி ’ஓபன் டாக்’

சமீபகாலமாக ஊடகங்களில் வைரலாகப் பரவி வரும் ஒரு செய்தி நடிகர் ஆர்யாவுக்கும் அவரை விட 22 வயது இளையவரான சாயிஷாவுக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது என்பதுதான்.
நடிகர் ஆர்யாவும் , நடிகை சாயிஷாவும் கஜினிகாந்த் படத்தில் ஒன்றாக பணியாற்றியதிலிருந்நு இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. மேலும் வரும் 10 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து பலரும் இதை நம்பினர். 
 
இந்நிலையில்  இந்த செய்தி உண்மையில்லை என்று எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணதி தெரிவித்திருக்கிறார்.
 
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யாவின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.  தற்போது இது பற்றி அபர்ணதி கூறியதாவது:
நடிகர் விஷாலுக்கு திருமணம் என்ற செய்திகள் வெளியானதும் அதை தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்தார். இப்போது ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் திருணம் என்ற செய்தி  வதந்தியாகப் பரவி வருகிறது. ஆனால் இதுவரை ஆர்யா இதை உறுதி செய்யவில்லை. அதனால் இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என்று தெரிவித்தார்.