செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (19:35 IST)

ஆர்யாவுக்கு கல்யாணமா? வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த எங்க வீட்டு மாப்பிளை குஹாசினி!

நடிகர் ஆர்யா நடிகை சாயிஷாவை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் சமீபத்தில் செய்திகள் உலா வந்தது.



இதனை கேட்ட பலருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது காரணம் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில்  வெற்றி பெரும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்துகொள்ளவதாக அறிவித்திருந்தனர்.ஆனால், இறுதி போட்டியில் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் அல்வா கொடுத்து விட்டார்.
 
ஆர்யா நடிகை சயீஷாவை  காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி  பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ‘எங்க வீட்டு மாப்பிளை’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குஹாசினி, தற்போது  ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. 
 
அந்த வீடியோவில் அவர் ,  எல்லோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எங்களிடத்தில் ஆர்யா யாரைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்று கேட்கிறீர்கள் அதை ஆர்யாவிடம் கேளுங்கள் என்று தெரிவித்துள்ளார்