வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 மே 2021 (08:38 IST)

ஜெயிச்சிட்டீங்க சரி.. வலிமை அப்டேட் எங்க? – வானதியை குடையும் அஜித் ரசிகர்கள்

தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வானதி சீனிவாசன் வெற்றிபெற்ற நிலையில் அவரிடம் வலிமை அப்டேட் குறித்து அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். அப்போது தேர்தல் பிரச்சாரம் களைக்கட்டியிருந்த சமயம் ட்விட்டரில் பதிவிட்ட வானதி சீனிவாசன் தான் வெற்றி பெற்றால் வலிமை அப்டேட் கிடைக்க வழி செய்வதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது வெற்றிபெற்று சட்டமன்றத்தில் பதவியேற்று கொண்ட அவர் ட்விட்டரில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் கமெண்ட் இட்ட அஜித் ரசிகர்கள் “ஜெயிச்சா வலிமை அப்டேட் வாங்கி தறேன்னு சொன்னீங்களே.. சீக்கிரம் வாங்கி தாங்க” என்ற ரீதியில் கமெண்டுகளை பறக்க விட்டு வருகின்றனர்.