முதன்முதலாக நடிகர்களின் சம்பளத்தை அறிவித்த நடிகர் சங்கம்....!
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர், நடிகைகளின் சம்பத்தை தெரிந்து கொள்ளவேண்டுமென்பதில் அவர்களின் ரசிகர்களுக்கு அவ்வளவு ஆர்வம் . ரசிகர்களின் இந்த ஆர்வம் சிவாஜி, எம்.ஜி.ஆர் சினிமா காலத்திலிருந்தே தொடர்கிறது.
இந்நிலையில் பிரபலங்களின் சம்பளத்தை தெரிந்துகொள்வதில், ரசிகர்கள் சண்டையிட்டுகொள்வதும், பத்திரிக்கை பிரபலங்களின் எடக்கு முடக்கான கேள்விகளுக்கும் நடிகர் சங்கத்தின் செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழ் நடிகர்களின் சம்பளத்தை பற்றி தெரிவித்தார்.
அதாவது, நடிகர்களின் ஒரு படத்திற்கான சம்பளம் பற்றிய உண்மை தகவலை வெளிப்படையான விரைவில் வெளியிடப்படும் என கூறியிருந்தார்.
அதன்படி தற்போது பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் இந்த சம்பள தகவல்கள் வெளியாகியுள்ளது. ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள முன்னணி ஹீரோக்களின் சம்பளங்கள்(ரூபாயில்)
ரஜினி - ரூ. 60 கோடி
கமல் - ரூ. 30 கோடி ( கமல் 2010ல் இருந்து தயாரிப்பு குழுவுடன் இலாப பங்கு வைத்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது )
விஜய் - ரூ. 40 கோடி
அஜித் - ரூ. 30 கோடி
சூர்யா - ரூ. 18 முதல் 22 கோடி
விக்ரம் - ரூ. 25 கோடி
சிவகார்த்திகேயன் - ரூ. 20 கோடி
விஜய் சேதுபதி - ரூ. 8 கோடி
பிரபலங்களின் சம்பள விவரத்தை பார்த்த ரசிகர்கள் மெய்சிலிர்த்து விட்டனர்.