விஜய் சேதுபதி தொலைத்த பணம் எவ்வளவு தெரியுமா...?

vijay
Last Updated: வியாழன், 20 டிசம்பர் 2018 (21:37 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள சீதக்காதி திரைப்படம் இன்று ரிலீசாகி உள்ளது. அவரது ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். 
இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் 2018 ஆம் ஆண்டு எப்படி போனது என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்து விஜய் சேதுபதி கூறியதாவது:
 
இவ்வாண்டு நல்லபடியாக இருந்தது. ஆனால் பணரீதியாக பெரிய அளவில் ரூ11கோடி அளவுக்கு இழப்பைச் சந்தித்துள்ளேன் என்று கூறினார்.
 
அடுத்ததாக சீதக்காதி திரைப்படம் பற்றி கேட்ட போது : ’ நம் தொழில் பற்றி அதிகமாக மகிழ்ச்சி அடைந்தால் நாம் மாறிவிடுவோம் என்று கருதுகிறேன். எனது அடுத்த படம் எப்போது என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பதே எனக்குப் பெருமையாக உள்ளது. நடிப்பது எளிமையானது அல்ல.அந்த சினிமாவை மக்களுக்கு கொண்டு செல்வது மிகப்பெரிய வேலை.’ இவ்வாறு அவர் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :