ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித்

drone
Last Modified புதன், 10 அக்டோபர் 2018 (19:02 IST)
விஜய் நடித்துள்ள சர்க்கார் படத்தின் அப்டேட்டுகளால் அஜித் ரசிகர்கள் ஒருவித கவலையில் இருந்துவந்தனர். அதற்கேற்றாற்போல் விஸ்வாசம் படத்தின் படக்குழுவினரும்  அடுத்தடுத்து தங்களை மகிழ்விக்கும் விதமாக அப்டேட்டுகளை வெளியிடாதது தான் ரசிகர்களின் மிகப்பெரிய கவலையில் ஆழ்த்தியது.
இருந்தாலும் விஸ்வாசம் படவேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அஜித் தற்போது இப்படத்திற்கான டப்பிங் வேலைகளில் இறங்கியுள்ளார் . மேலும்  விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகிவிட்டது.
 
இந்நிலையில், அஜித்தின் ஆலோசனையுடன் சென்னை பல்கலைகழக மாணவர்கள் தயாரித்த ஆளில்லா விமானம் ஆஸ்திரேலியாவில் பரிசு பெற்றள்ளது. இதற்கு உதவியாக இருந்த நடிகர் அஜித்குமாருக்கு அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் சூரப்பா பாராட்டுகளை தெரிவித்துள்ளார் .
 
இதனால் அஜித்தின்  ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :