ஆர்ஜே பாலாஜிக்காக விக்னேஷ் சிவன் செய்த செயல்! உருகிய நண்பர்கள்

VM| Last Updated: வெள்ளி, 14 டிசம்பர் 2018 (09:17 IST)
எல்கேஜி என்ற  உருவாகி வரும் படத்டிதல் ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். 



பிரபு இயக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதையை ஆர்.ஜே.பாலாஜி எழுதி இருக்கிறார். ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார்.  நிகழ்கால அரசியலை விமர்சித்து காமெடியாக படம் உருவாகி வருகிறது. விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார், லியோன் ஜேம்ஸ் இசையமைதிருக்கிறார்.. இந்நிலையில் எல்கேஜி படத்தின் ஒரு பாடலை மட்டும டைரக்டர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த பாடல் டெல்லியின் முக்கிய இடங்களான, நாடாளுமன்றம், ஜனபாத் ரோடு, ராஜ்பாத் ரோடு மற்றும் இந்தியா கேட் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
 
இந்த பாடலை படமாக்கி கொடுத்த விக்னேஷ் சிவனை டுவிட்டரில் ஆர்ஜே பாலாஜி வெகுவாக பாராட்டியுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள விக்னேஷ் சிவன் போதும் ப்ரோ ரொம்ப புகழாதீங்க என்று  பதில் அளித்துள்ளார்.
 
இதனிடையே கன்னடத்தில்  கொம்லே பொலிடீசன் ரோக்ராஜ் என்ற படம் 2018ம் ஆண்டு ஜனவரியில்  வெளியானது. காமெடி படமான இதை சாத் கான் என்பவர்  இயக்கி இருந்தார்,  இதில் தனிஷ்  சயித் என்பவர் நடித்திருந்தார்.
 
இந்த படத்தை தான் ஆர்ஜே பாலாஜி எல்கேஜி என்ற பெயரில் ரீமேக் செய்து வருதவாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :