புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 20 நவம்பர் 2018 (16:26 IST)

சீக்கிரம் கழுத்தில் தாலியை கட்டு - விக்னேஷுக்கு கோரிக்கை வைத்த நயன் ரசிகர்கள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது 34-வது பிறந்தநாளை தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடினார்.  
 
நயன்தாராவை சீக்கிரம் திருமணம் செய்யுங்கள் என்று நயன்தாரா ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
நயன்தாரா பிறந்தநாளுக்கு பல திரை பிரபலங்கள் , ரசிகர்கள் என ஏராளமானோர்  வாழ்த்துக்களை தெரிவித்தனர். 
 
நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் ஸ்பெஷல் கேக் ஆர்டர் செய்து,  வீட்டை அலங்கரித்து அசத்தி உள்ளார். கேக் வெட்டியபோது எடுத்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
 
அதை பார்த்த நயன்தாரா ரசிகர்கள் அவரிடம் ஒரே ஒரு கோரிக்கை தொடர்ந்து வைத்து வருகின்றனர். ‘எங்கள் தலைவி வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டார். செல்லத்தை கைவிட்டுவிடாதீர்கள் விக்னேஷ் சிவன். 
 
சீக்கிரமாக திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று நயன்தாரா ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். படங்களில் ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களில் மிரட்டும் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இருக்கும்போது மட்டும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது தெரிகிறது.