1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (09:56 IST)

அபிராமிக்கு ஷாக் கொடுத்த முகின் அம்மா!

பிக்பாஸ் வீட்டின் காதல் ஜோடிகளில் ஒன்று முகின் - அபிராமி என்பது தெரிந்ததே. ஆனால் வனிதாவின் வத்திக்குச்சி வேலைக்கு பின் இந்த காதல் உடைந்து சுக்குநூறானது. இருப்பினும் அபிராமி தனது தவறை புரிந்து கொண்டு முகினுக்காக வெளியே காத்திருப்பேன் என்று கூறினார். ஆனால் முகின் கடைசி வரை அபிராமி தனக்கு ஒரு நல்ல தோழி என்றே கூறி வருகிறார்.
 
 
இந்த நிலையில் முகினை பார்க்க மலேசியாவில் இருந்து சென்னை வந்த முகினின் தாயார், முகினை பிக்பாஸ் வீட்டிற்கு சென்று பார்க்கும் முன், அபிராமியை சந்தித்து பேசியுள்ளார். இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் முகினும், அபிராமியும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
 
 
முகின் தாயாரை சந்தித்த பின் தனக்கு பெருமையாக இருந்தது மட்டுமின்றி ஒரு தெளிவும் கிடைத்ததாகவும் அவரது புன்சிரிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் அபிராமி குறிப்பிட்டுள்ளார். முகின் வெளியே வந்ததும் அபிராமியின் காதலை ஒப்புக்கொள்வாரா? முகின் தாயார் அதற்கு உதவுவாரா? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்