"முகன் இல்லனா என்ன நான் இருக்கேன்" - அபிராமியிடம் காதலை சொன்ன முகன் நண்பர்!

Last Updated: சனி, 31 ஆகஸ்ட் 2019 (12:32 IST)
பிக்பாஸ் வீட்டில் பெரிதாக பேசப்பட்ட காதல் ஜோடிகளுக்குள் முக்கியமானவர்கள் முகன் - அபிராமி. இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் நல்ல நண்பர்கள் என்று கூறி வந்தனர். ஆனால், இதற்கிடை அபிராமி முகன் மீது ஆசைப்பட்டு அவரை காதலிப்பதாக கூறி ப்ரொபோஸ் செய்தார். 


 
இதனை அறிந்த முகன், நான் உன்னிடம் நல்ல நண்பனாக தான் பழகினேன். உன் நட்புக்கு நான் அவ்வளவு மரியாதையை வைத்திருக்கிறேன் என்று கூறி அபிராமியிடம் இருந்து சற்று விலகியே இருந்து வந்தார். இதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இந்த சண்டையில் ஒருகட்டத்தில் முகம் அதிகமாக கோபப்பட்டு பிக்பாஸ் வீட்டில் இருந்த மெத்தையை உடைத்து நொறுக்கினார். 


 
பின்னர் ஒருசில காரணங்களால் அபிராமி வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்பட்ட பிறகும் முகன் மீதிருக்கும் காதலை மாற்றிக்கொள்ளாமல் இருந்து வரும் அபிராமியை முகனின் நண்பர் ஒரு காதலிப்பாக கூறியுள்ளார். அபிராமி முகனுக்கு வெளியில் வேறொரு காதலி இருப்பது தெரிந்தும் எப்படி முகனை காதலித்தாரோ அதே அளவு அபிராமியை காதலிக்க எனக்கும் முழு அதிகாரம் இருக்கிறது என்று கூறியுள்ளார். 


 
மேலும் அபிராமி மட்டும் சரி என்றால் அவரை சந்திக்க நான் சென்னை வந்து விடுவேன்’ என்று கூறியுள்ளார். இதை பற்றி அபிராமியிடம் ஒருவர் பார்க்கச்சொல்லி சொன்னதற்கு.. ஆமாம், பார்த்து நான் மிகவும் கோபமாக இருக்கிறேன் என்று கூறி ரிப்ளை செய்துள்ளார்.

இதில் மேலும் படிக்கவும் :