புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (20:45 IST)

பிக்பாஸ் கவின் தாயாருக்கு 7 ஆண்டு ஜெயில் என தீர்ப்பு: பெரும் பரபரப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே கவினின் காதல் தான் பரபரப்பாக இருந்து வரும் நிலையில் கவின் குடும்பத்தில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. அதாவது கவின் தாயாருக்கு எதிரான வழக்கு ஒன்றில் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கவின் தாயார் உட்பட அவருடைய குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் சீட்டு கம்பெனி நடத்தி வந்ததாகவும் அந்த சீட்டு கம்பெனியில் அவர்கள் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தொடங்கியதாகவும் தெரிகிறது. இந்த வழக்கின் விசாரணை கடந்த சில வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது
 
இந்த தீர்ப்பில் கவின் தாயார் உட்பட அவருடைய குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்களுக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் கவின் குடும்பத்தினர் சோகமாக இருந்தாலும் இது குறித்து கவினுக்கு இன்னும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது