வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 17 நவம்பர் 2021 (18:14 IST)

மீண்டும் பிக்பாஸில் அபிஷேக்: வைல்ட்கார்ட் எண்ட்ரியா?

பிக்பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியாளராக வெளியேற்றப்பட்டவர் அபிஷேக் என்பதும் அவருக்கு போட்டியாளர்கள் மத்தியிலும் பார்வையாளர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஆனால் பிக் பாஸ் வீட்டில் இந்த மூன்றே வாரத்தில் அவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் என்பதும் பல்வேறு குழப்பங்களும் சண்டை சச்சரவுகளும் காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அபிஷேக் வழியாக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வரப் போவதாகவும் அவர் தற்போது தனைமைப்படுத்தி கொண்டு இருப்பதாகவும் அனேகமாக இந்த வாரத்தில் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது