திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (11:32 IST)

மனைவியை கொடுமைப்படுத்திய பிக்பாஸ் அபிஷேக்! – மனைவி புகாரால் பரபரப்பு!

பிக்பாஸ் சீசனில் பங்கேற்று வரும் அபிஷேக் தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவரது மனைவி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். இந்த ஷோவின் ஐந்தாவது சீசன் தற்போது நடந்து வரும் நிலையில் பிரபல யூட்யூபரும் , சினிமா விமர்சகருமான சினிமா பையன் என்றழைக்கப்படும் அபிஷேக் ராஜா கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் முன்னதாக அவரிடம் விவாகரத்து பெற்ற அவரது மனைவி தீபா பேட்டி ஒன்றில் பேசும்போது, அபிஷேக் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் அதனால்தான் தான் விவாகரத்து பெற்றதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.