1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 20 நவம்பர் 2021 (08:33 IST)

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ரீஎண்ட்ரியான அபிஷேக்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று மீண்டும் அபிஷேக் ராஜா ரீஎண்ட்ரி ஆனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பிக் பாஸ் போட்டியாளர் களில் ஒருவரான அபிஷேக் ராஜா 21ஆம் நாளிலேயே வெளியேற்றப்பட்டார் என்பதும் அவரது விளையாட்டு சக போட்டியாளர்கள் பிடித்திருந்தாலும் பார்வையாளர்களுக்கு கடும் எரிச்சலை தந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மக்களால் வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜா நேற்று மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார். அவரது வரவு போட்டியாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் இதேபோல் வனிதா ரீஎண்ட்ரி ஆன  நிலையில் தற்போது அபிஷேக் ராஜா ரீஎன்ட்ரி ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அபிஷேக் ராஜாவின் ரீஎண்ட்ரியால் வீட்டில் குழப்பங்கள் ஏற்படுமா? அல்லது சுவாரசியங்கள் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்