1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 15 ஜூன் 2024 (14:23 IST)

தீ பிடித்ததாக வதந்தி.. ஓடும் ரயிலில் இருந்து உயிரை காக்க குதித்த 3 பேர் பரிதாப பலி..!

Train
ரயிலில் தீ பிடித்ததாக வதந்தி பரவிய நிலையில் உயிரை காப்பாற்றுவதற்காக ஓடும் ரயிலில் இருந்து குதித்தவர்களில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து பீகார் மாநிலத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த ரயிலில் தீ பற்றியதாக ஓட்டுநருக்கு செல்போனில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
 
இதனை நம்பி ரயிலை நிறுத்த ரயில் ஓட்டுனர் முயன்ற நிலையில் இந்த தகவல் வேகமாக ரயில் பயணிகளிடம் பதவி நிலையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது, அப்போது ரயில் நிற்பதற்கு முன்பே சிலர் கீழே குதித்து தப்பிக்க முயன்றனர். அவ்வாறு கீழே குதித்தவர்களின் மூன்று பயணிகள் பலியானதாகவும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
 உண்மையில் ரயிலில் தீ பற்றவில்லை என்ற நிலையில் ஓட்டுனருக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அநேகமாக இது நக்சல் அமைப்பின் செயலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதிகள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran