1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2024 (17:04 IST)

திடீரென கிளம்பிய வதந்தி செய்தி: ரேஷன் கடை ஊழியர்களுக்கு உணவுத்துறை எச்சரிக்கை..

Ration shop
80 வயதிற்கு மேற்பட்டவர்களை ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்து பொருட்களை பெற வேண்டும் என வற்புறுத்தக்கூடாது என்றும், இதுதொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்றும் உணவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
80 வயதிற்கு மேற்பட்டவர்களும் ரேஷன் கடைகளில் நேரில் சென்று பொருட்களை பெற வேண்டும் என  உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டதாக பரவி வரும் செய்தி வெளியான நிலையில் உணவுத்துறை இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. 
 
80 வயதிற்கு மேற்பட்டவர்களை ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்து பொருட்களை பெற வேண்டும் என வற்புறுத்தக்கூடாது  என்றும், இதனை மீறும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, இது குறித்து பொதுமக்கள் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் என்றும் உணவுத்துறை தெரிவித்துள்ளது.
 
80 வயதுக்கு மேல் உள்ள நபர்களின் குடும்பத்தினர் யார் வேண்டுமானாலும் வந்து ரேஷன் கடையில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தான் திடீரென ஒரு வதந்தி செய்தி பரவியதால் உணவுத்துறை இந்த விளக்கத்தையும், ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கையையும் விடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran