ஏன் சினிமாவை விட்டு ஒதுங்கினேன் – சாக்லேட் பாய் ஹீரோ பதில்!

Last Modified வியாழன், 21 ஜனவரி 2021 (17:04 IST)

நடிகர் அப்பாஸ் தான் ஏன் சினிமாவில் இருந்து விலகினேன் என்பது குறித்து பதிலளித்துள்ளார்.

இயக்குனர் கதிர் இயக்கிய, காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகமான அப்பாஸ், உடனடியாக சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் மாறினார். அதையடுத்து அவருக்கு பல படங்கள் புக் ஆகின. ஆனால் அவர் விஜய் அஜித் போல ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் நடிக்காமல் விட்டார். இதனால் சில படங்கள் மட்டுமே ஹிட் ஆக பல படங்கள் பிளாப் ஆகின.

இதனால் ஒரு கட்டத்தில் வில்லன் கதாபாத்திரங்கள் வர ஆரம்பித்து கடைசியில் வாய்ப்பே இல்லாமல் போனது. இதனால் அதிருப்தியான அப்பாஸ் சில விளம்பர படங்களில் தலைகாட்டி விட்டு காணாமல் போனார். இந்நிலையில் அவர் இப்போது நியுசிலாந்து நாட்டில் செட்டில் ஆகிவிட்டாராம். அங்கு ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் முக்கியப் பதவியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவர் அளித்துள்ள நேர்காணலில் சினிமாவை விட்டு ஏன் விலகினேன் என்பது குறித்து பேசியுள்ளார். அதில் ‘என்னை ஈர்க்கும் அளவுக்கு எந்த கதையும் வரவில்லை. அதனால் ஒரு கட்டத்தில் எனக்கு நடிப்பதே சலிப்பு ஏற்பட்டு விட்டது. இப்போது குடும்பத்தோடு மகிழ்ச்சியாகதான் இருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :