புதன், 13 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 19 ஜனவரி 2021 (19:26 IST)

’’விஜய்க்கு நன்றி....மக்களைக் காப்பாற்றியது சினிமா’’ - ஹிட் பட இயக்குநர்

இவ்வுலகத்தையே புரட்டிப்போட்ட கொரொனாவால் மக்கள் இன்னும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். பல நாடுகள் பொருளாதார ரீதியாக பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா காலத்தில் மக்களைக் காப்பாற்றியது சினிமா தான் என்று இயக்குநர் ஆர்.வி, உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற மற்றும் ஹிட் பட இயக்குநர் ஆர்.வி உதயகுமார். இவர் இயக்கிய சின்னக் கவுண்டர், எஜமான், பொன்மணி, கிழக்கு வாசல் உள்ளிட்ட படங்கள் என்றும் கிளாசிக் ரகம்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்தியாவில் கொரொன கால ஊரடங்கு இருந்து வரும் நிலையில் தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு உள்ளது.

தற்போது அரசு வழிகாட்டு முறைகளின் படி படப்பிடிப்புகள் மற்றும் அனைத்து துறைகளும் இயங்கி வருகின்றனர்.

ரேகா புரொடெக்சன் சார்பில் உருவாகியுள்ள வெட்டி பசங்க பட இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆர்.வி உதயகுமார்: கொரோனா காலத்தில் மக்களைக் காப்பாற்றியது சினிமாதான் என்று கூறியுள்ளார்.

மேலும், சினிமா தொழிலாளர்கள் மற்றும் தியேட்டர் தொழிலாளர்களின் நலனைக் கருத்திக்கொண்டு, பல நாட்கள் கழித்து மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிட்ட விஜய்க்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.