ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2023 (09:44 IST)

மகேஷ் நாராயணன் படத்தில் நானே நினைத்தாலும் நடிக்க முடியாது… கமல் சொன்ன தகவல்!

விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து கமல் நடிக்கும் அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதையடுத்து அந்த படத்தை விஸ்வரூபம் படத்தின் படத்தொகுப்பாளர் மகேஷ் நாராயணன் இயக்க உள்ளார். இதை கமல்ஹாசனே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மகேஷ் நாராயணன் c u soon மற்றும் மாலிக் ஆகிய படங்களின் மூலமாக வெற்றிகரமான இயக்குனராக அறியப்படுபவர். ஆனால் அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த படம் பற்றிய வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது இந்த படம் நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி பத்திரிக்கையாளர் சித்ரா லட்சுமணன் தன்னுடைய யுடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். அதில் சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்த போது இந்த படம் பற்றி கேட்டதாகவும், அதற்கு கமல்ஹாசன் அளித்த பதிலையும் தெரிவித்துள்ளார். அதில் “இப்போது நானே நினைத்தாலும், அந்த மாதிரி படங்களில் நடிக்க முடியாது. ஆனால் அந்த படத்தை எங்கள் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கலாம்.” எனக் கூறியுள்ளார். அதனால் மகேஷ் நாராயணன் படம் இப்போதைக்கு கமல் நடிக்க வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.