வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 9 மார்ச் 2023 (08:20 IST)

“இன்னும் நான் வடசென்னை பாக்கல… அதுக்குக் காரணம்…” ஒபனாக சொன்ன விஜய் சேதுபதி!

கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய  விடுதலை படம் மார்ச் இறுதியில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர். இந்நிலையில் ஷுட்டிங் முடிந்து தற்போது பின் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன. படத்தின் டப்பிங் சமீபத்தில் நடந்து முடிந்தன. படத்தின் பாடல்கள் மற்றும் இசை வெளியீடு நேற்றிரவு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஜய் சேதுபதி வடசென்னை படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது பற்றி பேசியுள்ளார். அதில் “வடசென்னை படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்துவிட்டேன். அது இப்பவும் வருத்தமாக உள்ளது. அதனால்தான் இன்னமும் அந்த படத்தை நான் பார்க்கவில்லை. இது வெற்றிமாறன் சாருக்கும் தெரியும். அந்த படத்தின் பாடல்களை மட்டுமே பார்த்துள்ளேன்” எனக் கூறியுள்ளார். விடுதலை படத்தில் விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் எனும் மக்கள் போராளியாக நடித்துள்ளார்.