ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 4 மார்ச் 2023 (15:02 IST)

முதல் முறையாக சின்னத்திரை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராமராஜன்!

80களின் இறுதியிலும் 90 களின் தொடக்கத்திலும் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் ஆகியவர்களுக்கு இணையாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராமராஜன். சைக்கிளில் வந்து அவர் வீட்டில் கால்ஷீட் வாங்கி படம் தயாரித்து கோடீஸ்வரர்களான தயாரிப்பாளர்கள் உண்டு. அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களின் நடிகராக வலம் வந்த அவர் ஒரு கட்டத்தில் தனது படங்கள் தோல்வி அடைந்ததால் மார்க்கெட்டை இழந்தார். அதைத் தொடர்ந்தும் கிடைக்கும் வாய்ப்புகளில் நடிக்காமல் நடித்தால் ஹீரோவாகதான் நடிப்பேன் என அடம்பிடித்து வந்த அவர், இப்போது சாமானியன் திரைப்படம் மூலமாக மீண்டும் ரி எண்ட்ரி கொடுக்கிறார்.

இந்நிலையில் முதல் முறையாக அவர் சின்னத்திரை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், கலக்கப் போவது யாரு சீசன் நான்கில் இந்த வாரத்தின் சிறப்பு விருந்தினராக ராமராஜன் கலந்துகொள்கிறார். அது சம்மந்தமான ப்ரமோஷன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.