புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 28 செப்டம்பர் 2017 (13:21 IST)

சிநேகனுக்கு எதிராக களம் இறங்கிய முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், இறுதி போட்டியில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே இருந்து வருகிறது. இதில் சிநேகன் கோல்டன் டிக்கெட் பெற்று ஏற்கனவே இறுதி போட்டிக்குள் முதல் ஆளாக நுழைந்து விட்டார்.

 
தற்போது வந்துள்ள ப்ரொமோவில் 5 போட்டியாளகளில் ஒருவர் அதிரடியாக வெளியேற்றப்படுகிறார். இதில் இறுதி போட்டியில் 4 பேர் மட்டுமே இருக்க வேண்டும். தற்போதைய நிலையில் இறுதி போட்டியில் வெல்வதற்கான பொதுமக்கள் வாக்குகளில்  சிநேகன் முன்னிலையில் உள்ளார்.
 
இது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட காயத்ரி, சுஜா மற்றும் காஜலுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி  உள்ளது என கூறப்படுகிறது. எனவே இவர்கள் மூவரும் சிநேகனுக்கு எதிராக திரும்பி உள்ளனர்.
 
இந்நிலையில் காயத்ரி தற்போது ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் சிநேகன் எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். எனவே  அவருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று ட்விட்டில் பதிவிட்டுள்ளார். இது சினேகனுக்கு ஆதரவான ட்விட் இல்லை என்றும், காயத்ரிக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இல்லாத நிலையில், அவர் சிநேகனுக்கு ஓட்டு கேட்டால் யாரும் போட மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இதை செய்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. மேலும் இதற்கு முன்பு சிநேகனுக்கு எதிரான ட்விட்களை எல்லாம் லைக் செய்துள்ளார். 
 
அதே போல ஆரவ் வெல்ல வேண்டும் என்ற ட்விட்டுக்கு லைக் செய்துள்ளார். அதே போல சிநேகன் பட்டம் வெல்லக் கூடாது என காஜல் மற்றும் சுஜா குறிக்கோளோடு உள்ளனர். காஜல் தனது ட்விட்டில் சுஜா காலில் அடிபட்ட போட்டோவை போட்டு  உள்ளார். சுஜா காயம் அடைந்ததற்கு சினேகன்தான் காரணம் என்று கூறி உள்ளார்.
 
இதற்கு சுஜா உடனடியாக ரீட்விட் செய்து உள்ளார். இதனை எல்லாம் வைத்து பார்க்கும்போது இந்த மூன்று பேருமே சிநேகனுக்கு எதிராக களம் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.