1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 30 செப்டம்பர் 2017 (12:19 IST)

வெற்றியாளர் யார்? பிக்பாஸ் வீட்டிற்குள் ஓவியா; 8.30-க்கு கிராண்ட் ஃபினாலே.....

பாலிவுட்டில் முதலி துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி அதனை தொடர்ந்து கோலிவுட் மற்றும் டோலிவுட்டிலும் துவங்கப்பட்டது.


 
 
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளரான சிவ பாலாஜி ரூ.50 லட்சத்தை தட்டி சென்றார்.
 
தற்போது தமிழ் பிக்பாஸ் அதன் இறுதி நாளை எட்டியுள்ளது. இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடைபெறவுள்ளது.
 
மொத்தம் 15 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்துவழங்கி வருகிறார். தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். இவர்களில் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
 
அந்த நான்கு போட்டியாளர்கள் ஆரவ், கணேஷ், சினேகன் மற்றும் ஹரிஷ் ஆவார். இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் செல்ல உள்ளனர். பிக்பாஸ் வீட்டில் தங்களது கடைசி நாளை செலவிடவுள்ளனர்.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலமடைந்தவர் ஓவியா. இவரும் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவுள்ளார். எனவே, இன்றைய நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.