செவ்வாய், 18 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 25 நவம்பர் 2023 (18:57 IST)

''ஞானவேல் ராஜா வாரியிறைத்த வன்மமான வார்த்தைகள்''- அமீருக்கு ஆதரவளித்த சசிக்குமார்

அமீர் இயக்கத்தில் கார்த்தியின்  நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் பருத்தி வீரன். இப்படம் பெரிய வெற்றி பெற்றது.

இப்படம் கார்த்திக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்த  நிலையில், சமீபத்தில் அவர் தன் 25 வது படமாக ஜப்பான் நடத்தின் விழாவை பிரமாண்டமாக கொண்டாடினார்.

இந்த விழாவில் அவர் படத்தை இயக்கிய இயக்குனர்கள் எல்லோரும் கலந்து கொண்டனர். ஆனால், பருந்தி வீரன் பட இயக்குனர்  அமீர் கலந்துகொள்ளவில்லை.

இதுபற்றி ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் இயக்குனர் அமீரை ஏன் அழைக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். பருத்திவீரன் ரிலீஸின் போதே இயக்குனர் அமீருக்கும் கார்த்தி தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அது இதுவரை சமாதானமாகவில்லை;

இதுகுறித்து அமீர், சமீபத்தில் ஒரு யூடியூப் பக்கத்தில் மனம் திறந்திருந்தார். இதற்குப் பதிலடியாக தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் நிறுவனர் ஞானவேல் ராஜா அமீர் பற்றி குற்றச்சாட்டு கூறியிருந்தார்.

இந்த நிலையில், இயக்குனர் மற்றும் நடிகர் சசிக்குமார்  நேற்று தன் எக்ஸ் தளத்தில்,

‘’அண்ணன் அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன்

'பருத்திவீரன்” இறுதி கட்ட படப்பிடிப்பிற்கான முழு தொகையையும் அண்ணன் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யப்படாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அவர் சொல்வது உண்மை’’என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்  சசிக்குமார் இன்று மீண்டும் தன் எக்ஸ் தளத்தில்'' அண்ணர் அமீர் இயக்குனர் சங்கத்தின் பொறுப்பில் இருக்கும்போது பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைத்தவர். அவர் பிரச்சனை தீர்க்கும் வல்லமையும் அவருக்கு உண்டு. இப்பொழுது அண்ணர் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாரியிறைத்த  வன்மமான வார்த்தைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை இயக்குனர்கள் சங்கம் தனது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். மெளனமான இருப்பதென்பது உண்மையை மறைத்து வைப்பதற்குச் சமம்'' என்று தெரிவித்துள்ளார்.