“பசியாற்றிய வள்ளல்… நெகிழ்ச்சியாக இருக்கிறது…” விஜயகாந்த் குறித்து ஏ ஆர் ரஹ்மான்!
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 71. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது.
அதையடுத்து இன்று காலை 4 மணிக்கு பொதுமக்கள் பார்வைக்காக தீவுத்திடல் கொண்டு செல்லப்பட்டது. இன்று மாலை 5 மணியளவில் கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதையடுத்து விஜயகாந்தின் சக திரையுலகக் கலைஞர்கள் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் விஜயகாந்த் குறித்த இரங்கல் பதிவில் “திரைத்துறையில், கதாநாயகனாக தான் உண்ணும் அதே தரமான உணவே எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று போராடி வென்றார். பசியாற்றிய வள்ளல் என்று இன்று எல்லோரும் அவரைப் புகழ்வது நெகிழ்ச்சியாக இருக்கிறது.#RIPCaptainVijayakanth” எனத் தெரிவித்துள்ளார்.