திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (07:13 IST)

பிள்ளைகளுக்கு சிறந்த அட்வைஸ் இதுதான்… தந்தை குறித்து நெகிழ்ந்த இசைப்புயல்!

தமிழ் சினிமாவில் ரோஜா திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான். ரோஜா படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்து அவருக்கு அந்த படத்திலேயே தேசிய விருதையும் பெற்று தந்தது.

அதையடுத்து கடந்த 30 ஆண்டுகளாக இந்தியா முழுக்க அறிந்த இசையமைப்பாளராக வலம் வரும் ரஹ்மான் ஹாலிவுட்டுக்கும் சென்று இரண்டு ஆஸ்கர் விருதுகளை ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக பெற்று வந்தார்.  இப்போது கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது தந்தை குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். அதில் “ நமது நடத்தைதான் நம் குழந்தைகளுக்கு சிறந்த அட்வைஸ்.  நாம்தான் அவர்களுக்கு கண்ணாடி மாதிரி. எங்க அப்பா சிறந்த மனிதரா இருந்திருக்கார். அவருக்கு மகனாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன். அவரின் நற்பெயரை காப்பாற்றதான் நான் பிறந்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.