13 ஆண்டுகளுக்குப் பிறகு இணைகிறதா அஜித் – ரஹ்மான் கூட்டணி ?

Last Modified புதன், 31 ஜூலை 2019 (13:46 IST)
அஜித் நடிக்கும் அடுத்தபடத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

அஜித்தின் 59 ஆவது படமான நேர்கொண்ட பார்வைப் படம் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் மாஸ், மசாலாக்களை ஒதுக்கி வைத்துவிட்டு இந்தப்படத்தில் நடிக்கிறார். இதனால் இந்தப்படத்துக்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி பொதுவான சினிமா ரசிகர்களுக்கு இடையேயும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அஜித்தின் அடுத்தப்படத்தையும் இந்தப்படத்தை இயக்கிய ஹெச் வினோத்தே இயக்க இருக்கிறார். இந்தப்படத்துக்கான பூஜை ஆகஸ்ட் மாத இறுதியில் போடப்பட இருக்கிறது. இந்தப்படத்துக்கு இசையமைக்க இசைப்புயல் ஏ அர் ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் கடைசியாக அஜித் நடித்த வரலாறு படத்துக்கு ரஹ்மான் 13 ஆண்டுகளுக்கு முன்னர் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :