அஜித்துடன் மோதும் விக்ராந்த்- காப்பாற்றிய உதயநிதி ?

Last Modified புதன், 31 ஜூலை 2019 (09:31 IST)
விக்ராந்த் நடித்துள்ள பக்ரீத் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட இருக்கிறது.

விக்ராந்த் நடித்துள்ள பக்ரீத் படம் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கு முந்தைய நாள் அஜித் நடிப்பில் வெளியாகும் நேர்கொண்ட பார்வை வெளியாக இருப்பதால் பக்ரீத்துக்கு போதுமான தியேட்டர்களோ வரவேற்போ கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்போது பக்ரீத் படத்துக்கு நல்ல செய்தியாக அந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் வெளியிட இருக்கிறது. இதனால் அந்தப் படத்துக்குப் போதுமான தியேட்டர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப்படத்தை சிகை படத்தை இயக்கிய ஜகதீசன் சுப்பு இயக்க, வசுந்தரா, எம்.எஸ். பாஸ்கர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார்.

 இதில் மேலும் படிக்கவும் :