மாஸ் காட்டும் போலீஸ் சூப்பர் ஸ்டார் - தர்பார் புகைப்படங்கள் உள்ளே!

Darbar
Last Updated: வியாழன், 25 ஜூலை 2019 (20:48 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளியாகவிருக்கும் தர்பார் படத்தின் ரஜினி கதாப்பாத்திரத்தின் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.

சூப்பர் ஸ்டார் ரஜின்காந்த் நடித்து வெளியாக இருக்கும் புதிய படம் “தர்பார்”. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். முருகதாஸ் ரஜினியை வைத்து இயக்கும் முதல் படம் இதுவாகும். இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
Darbar

இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்த படத்தில் ரஜினி போலீஸ் உடுப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக ரஜினியின் கதாப்பாத்திர புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படம் 2020 பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Darbarஇதில் மேலும் படிக்கவும் :